Sunday, November 15, 2009

தமிழ் பெஸ்ட் பற்றி சில பதிவர்கள்

மலைநாடான்

புதிய தொழில் நுட்பத்தின் வழி கிடைக்கும் இணையவசதிகள் தமிழிலும் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில், கிடைத்திருக்கும் மற்றுமொரு புதிய நுட்பத்தினடிப்படையில் தோன்றியிருப்பவைதான், தமிழிஷ், தமிழ்பெஸ்ட், ஆகியன. தற்போதைக்கு அதிக வாசகர்வட்டத்தை தம்பால் இவையிரண்டும் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பது மிகையல்ல. ஆதலினால் அவையிரண்டும் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.


தமிழிஷ், தமிழ்பெஸ்ட்டில், இணைத்தேன் நல்ல கிட்ஸ் என நண்பரொருவர் சொன்னார். இணைப்பது சுலபம், கட்டுப்பாடுகள் கிடையாது, நிறைந்த வாசகர் வருகை, என்பன இவற்றின் சிறப்பென்பது உண்மைதான். பதிவர்களே அநேகமாக வாசகர்களாகவும் இருக்கும் வலைப்பதிவுத் திரட்டிகளை விடவும், பதிவர் அல்லாத இணைய வாசகர் அனைவரையும் இவ்வகைத்திரட்டிகள் கவர்கின்றன என்பதும் உன்மைதான். அதனாலேயே அதிக வாசகர் வருகை இங்கே இணைக்கும் போது கிடைக்கின்றது. ஆனால் இந்த அதிகமான வருகையும், குறைவான கட்டுப்பாடுகளும், தரமான எழுத்துக்களை, பதிவுகளைத் தர உதவுமா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், அதிக வாசகர் பரம்பலை விரும்பும் போது, அங்கே பரபரப்பான தலைப்புக்கள்,கவர்ச்சிகரமான விடயங்களே அதிகம் முன் வைக்கப்படும். அவற்றின் நடுவே ஒருசில நல்ல விடங்களும் வரலாம். ஆனால் மற்றவைகள் பெறும் முன்னிலையில் இவை பின்னடைந்து போகும். கவனிப்பிழந்து போகும். ஆக இவை ஒரு பரபரப்புத் தரும் திரட்டிகளாக இருக்குமெனக் கருதவே இடமுண்டு.

http://malainaadaan.blogspot.com/2008/09/tamilish-thamilbest.html

இனியவன்

தமிழ் மணம் கருவிப்பட்டையை இணைத்தவுடன் நீங்கள் அந்த கருவிப்பட்டையிலிருந்தே உங்கள் இடுகையை இணைக்கலாம்.
தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி ஆகியவை “திரட்டிகள்” aggregators
தமிழிஷ், தமிழ்பெஸ்ட், என்தமிழ், நியூஸ்பானி ஆகியவை bookmarking services
இரண்டிற்கும் வித்தியாசங்கள் பல

http://www.iniyavan.com/2009/05/blog-post_21.html


நதியோசை

TOP 5 தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள்

http://www.nathiyosai.com/2008/11/top-5.html

பதிவர்களுக்கு ஓரு ஆனந்த அறிவிப்பு

ஆம் பதிவர்களுக்கெல்லாம் ஓரு ஆனந்த அறிவிப்புதான். நாம் என்னதான் பதிவுகள் எழுதினாலும் அதையெல்லாம் திரட்டி ஓரே இடத்தில் தருவதற்கு தமிழ்மணம், தேன்கூடு, மாற்று, தமிழ்வெளி போன்றவைக்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சமீபகாலமாய் தேன்கூடு திரட்டி காணவில்லை. யாருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல. சரி அதவிடுங்க. சமீபத்தில் புதிதாய் தமிலிஷ், தமிழ்பெஸ்ட்,தமிழகம், என்று மூன்று புதிய திரட்டிகள் வந்திருக்கிறது.. என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறேன்.

TOP 10 திரட்டிகள் , புக்மார்க் தளங்கள்

http://www.nathiyosai.com/2009/07/top-10.html

http://tamilvelibkp.blogspot.com/2009/07/2009-07-06_9597.html


இன்தமிழ்

இணைக்கும் புகைப்படத்துக்கு Caption அல்லது சிறுவிளக்கம் தரமுடிகிறது. இடையில் சிலகாலம் இல்லாமல் மீண்டும் வந்திருக்கிறோம் என்கிறார்கள். நல்ல வடிவமைப்பு. தளத்திற்கு வரவேற்பு அதிகரிக்கலாம்.

http://enthamizh.blogspot.com/2009/06/blog-post_22.html

கோவிக்கண்ணன்

திரட்டிகள் ரேஸ்... யாருக்கு முதலிடம் !

வலைப்பதிவுகள், வலைப்பதிவாளர்கள் எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக திரட்டிகளின் (தமிழ்பதிவுகள் தமிழ்வெளி சங்கமம் தமிழிஷ் தமிழ் கணிமை திரட்டி.காம் ) எண்ணிக்கையும் மிகுந்து கொண்டே வருகிறது.... தற்பொழுது தமிழ் பதிவு திரட்டியாக 10க்கு மேற்பட்ட திரட்டிகள் இயங்குகின்றன.

http://govikannan.blogspot.com/2008/12/blog-post_7858.html


http://10hot.wordpress.com/2009/06/11/tamil-blog-aggregators-list-of-bookmarking-services/

அனைத்து பதிவர்களுக்கும் தமிழ் பெஸ்ட் இன் நன்றிகள்

No comments:

Post a Comment