Monday, July 19, 2010

ஒரே தளத்தில் இருந்து தொடர்ச்சியாக!

வலைப்பூ அல்லது இணையத்தளம் வைத்திருப்பவர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து தங்களது பதிவுகளை தமிழ்பெஸ்ட் இல்
இணைக்கும் போது அவை வாசகர்களை நிச்சயம் கவராது.

இதற்கு பதிலாக மற்றொருவரின் பதிவு வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் பதிவை இணைப்பது ஓரளவேனும் வாசகரை கவரும். (குறைந்தது 5 நிமிட இடைவெளியின் பின்னர்)

இதற்காக தான் தமிழிஷ் போன்ற பிரபல திரட்டிகள் இணைக்கும் பதிவுகளுக்கிடையே கால இடைவெளி விட்டு இணைப்பை இணைக்கும் நடைமுறையை வைத்திருக்கின்றனர்.

அதாவது கால இடைவெளிவிட்டு நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு புதிய வாசகரை நிச்சயம் பெறமுடியும்.

அத்தோடு கூகுள் நியூஸ் போன்ற பிரமாண்டமான தானியங்கி திரட்டிகள் குறைந்தது 30 நிமிட நேரத்தில் புதிப்பிக்கப்படுமாறு இயங்குகின்றன என்பதையும் கவனிக்கலாம்.

புதிய வலைப்பதிவாளர்களுக்கு இதைப்பற்றி விளங்கிக்கொள்வது சற்று கடினம் தான். ஆனால் பிரபல இணையத்தளங்களை நிர்வகிக்கும் அனுபவம் வாய்ந்த வெப்மாஸ்டர்களால் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இணைப்புக்களை இணைப்பதனால் இருக்கும் பின்னடைவுகளை புரிந்துகொள்ள முடியுமென கருதலாம்.

இது தொடர்பாக மேலதிக விளக்கங்களுக்கு thamilbests@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள்.

தமிழ்பெஸ்ட்

No comments:

Post a Comment